கோதானம்
மரணத்திற்கு பின் ஒரு ஆன்மா முக்தி பெறாத ஆன்மாவாக இருப்பின் அது வைதரணி நதியை கடந்தே ஆக வேண்டும்.
வாழும் காலத்தில் ஒரு மனிதன் கோதானம் செய்திருந்தால் பசுமாட்டின் வாலை பிடித்துக் கொண்டு அவ்வைதரணி நதியை எளிதாக கடந்து விடலாம்.
கோதானம் செய்வதனால் ஏற்படும் நன்மைகள்:
- அஷ்ட லக்ஷ்மி அருள் கிடைக்கும்
- சகல விதமான தோஷங்களும், பாவங்களும்நிவர்த்தியாகும்
- நவகிரக தோஷங்கள் நீங்கும்
- தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் சாபங்கள் நீங்கும்
- கன்யா ( கன்னிகா) தானம் பெறுவதினால் ஏற்படும் தோஷத்தை கோதானம் செய்வதனால் நிவர்த்தி கிடைக்கும்
- கோதானம் செய்வதால் மனிதனுக்கு வாழும் காலத்தில் மட்டுமல்லாது மட்டுமள்ளாது மரணத்துக்கு பின்பும் சகல செளகியங்களையும் கொடுக்கவல்லது.
- பல்வேறு தானம் செய்த பலனை இந்த கோதானம் பெற்று தரும்.
- யம பயம் நீங்கும்.
- 14 தலைமுறைக்கு சொர்க்க (ப்ராப்தி) பதவி கிட்டும்
- குடும்பத்தில் ஒற்றுமை, நிம்மதியான சூழல் ஏற்படும்.
- அனைத்துவிதமான சுபகாரியங்களிலும்
- (சஷ்டியப்த பூர்த்தி, சதா பிஷேகம், கல்யாணம்) போன்ற சுப காரியங்களிலும் தகுங்த மனிதர்களுக்கு கோதானம் செய்வது மிகுங்த புன்னியத்தை பெற்றுத்தரும்.
பசு (கோவின்) வின் ரூபம் தரிசனத்தால் ஏற்படும் பலன்கள்
- பசுவின் உடம்பு முழுக்க தெய்வங்களின் அனுகிரங்களும் ஏற்படும்
- இறைவனுக்கு பல ரூபங்கள் உண்டு, அதில் பசுவும் ஓன்று
- சகல தெய்வங்களும், சகல விதமான தேவதைகளும் பசுவின் உடம்பில் வாஸம் செய்கின்றன. ஆதலால் பசுவை தரிசிப்பது தெய்வ தரிசன பலனை பெற்றுத் தரும்
- கோசாலையில் மந்திரம் ஜபம், திரு நாம ஜபம் யாகம் செய்வது 100மடங்கு பலனை அதிகமாகதரும்.
பசுவுக்கு உண்வளிப்பதால் ஏற்படும் நன்மைகள்
- கோதானம் (பசு) செய்ய முடியாதவர்கள் பசுவுக்கு தேவையான உணவு, இருப்பிடம், நோயுற்றால் மருத்துவம் பார்பது போன்றவற்றை செய்யலாம்.
- நவகிரக தோஷம் நீங்க, எந்த் கிரகத்தால் பாதிப்பு ஏற்படுகிறதொ அந்த கிரகத்திற்கு உரிய கிழமைகளில் அந்த தோஷம் நீங்க வழி பிறக்கும்.
- பசுவிற்கு அகத்திக்கீரை அளித்தால் 100 பிராமணர்களுக்கு பலன் கிடைக்கும்
- சகல செளபாக்கியங்களும் ஏற்படும்
- பசுவிற்கு உணவு அளிப்பது பித்ரு தோஷம் நீங்க வழி பிறக்கும்