பிரம்மோற்சவம்

பிரம்மோற்சவம் என்பது இந்துக் கோவில்களில், குறிப்பாகத் தென்னிந்தியாவில் உள்ள பெரிய கோவில்களில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய வருடாந்திரத் திருவிழா ஆகும். “பிரம்மோற்சவம்” என்ற சொல்லுக்கு “பிரம்மனால் நடத்தப்படும் உற்சவம் (திருவிழா)” என்று பொருள்.

புராண பின்னணி

  • பிரம்மா நடத்திய முதல் உற்சவம்: புராணங்களின்படி, பிருகு முனிவரின் செயலால் திருமகளைப் பிரிந்த மகாவிஷ்ணு, பூலோகத்தில் வேங்கட மலையில் குடியேறினார். மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ வெங்கடேஸ்வரருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், மனிதகுலத்திற்கு அவர் அளித்த பாதுகாப்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், பிரம்மதேவர் (படைப்புக் கடவுள்) முதன்முதலில் இந்த மாபெரும் திருவிழாவைத் தொடங்கினார் என்று நம்பப்படுகிறது.
  • விஷ்ணுவின் சம்மதம்: பிரம்மாவின் பக்தியால் மகிழ்ந்த மகாவிஷ்ணு, பிரம்மோற்சவம் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கொண்டாடப்பட வேண்டும் என்று வரம் அளித்தார். அதிலிருந்து, இத்திருவிழா பிரம்மாவின் பெயரால் ‘பிரம்மோற்சவம்’ என்று அழைக்கப்படுகிறது.
  • இந்திரனின் பாவம் நீங்க: மற்றொரு புராணக் கதையின்படி, இந்திரன் ஒரு பிராமண அரக்கனைக் கொன்ற பாவத்திலிருந்து விடுபட, பிரம்மாவின் ஆலோசனைப்படி விஷ்ணுவை சுமந்து ஒரு சடங்கைச் செய்தான். அந்த சடங்கே இன்று பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது
  • திருமகளும், விஷ்ணுவும் மீண்டும் இணைவதற்காகவும், உலக உயிர்கள் அனைத்தும் நல்வாழ்வு வாழவும், படைப்புக் கடவுளான பிரம்மா, மகாவிஷ்ணுவின் உத்தரவின் பேரில், இந்த மாபெரும் திருவிழாவை முதன்முதலில் நடத்தினார்.

வரலாற்றுத் தகவல்கள்

  • கி.பி. 614-ஆம் ஆண்டில், பல்லவ அரசி ‘சமவை’ (பெருந்தேவி) என்பவரால் முதல் பிரம்மோற்சவம் நடத்தப்பட்டதாக கல்வெட்டு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
  • அதன் பின்னர் பல அரசர்கள், சக்ரவர்த்திகள் மற்றும் ஜமீன்தார்கள் இந்த விழாவை முன்னின்று நடத்தியுள்ளனர்.

முக்கியத்துவம்

  • இது பொதுவாக 9 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை நடைபெறும் திருவிழாவாகும்.
  • விழாவின் முதல் நாளில், கருடன் உருவம் பொறிக்கப்பட்ட கொடி, துவஜஸ்தம்பம் (கொடிமரம்) எனப்படும் தங்கக் கொடிமரத்தில் ஏற்றப்பட்டு, சகல தேவர்களையும், அட்டதிக்கு பாலகர்களையும் விழாவிற்கு அழைப்பு விடுக்கப்படுகிறது (துவஜாரோஹணம்).
  • ஒன்பதாம் நாளன்று, சக்கர ஸ்நானம் மற்றும் கொடியிறக்கத்துடன் (த்வஜாவரோஹணம்) விழா இனிதே நிறைவுபெறும்.
  • புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானின் பிறந்த நட்சத்திரமான திருவோணம் நட்சத்திர நாளில் பிரம்மோற்சவம் நிறைவடையும் வகையில் நடத்தப்படுகிறது.
  • இந்த நாட்களில் ஏழுமலையான் தினமும் காலை மற்றும் மாலையில் விதவிதமான வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
Scroll to Top