நித்ய அன்னதானம்

    “ அன்னதானம் சமம் தானம் த்ரிலோகேசு நாவித்யத்தி நகி நகி பகு தானம் அன்னதானம் சமானம் “

மூன்று லோகங்களிலும் அன்னதானத்திற்கு இணையான தானம் கிடையாது.

அன்னதானம் செய்வதனால் ஏற்படும் பலன்கள்:-

  1. உணவு அளித்தல் என்பது நேரடியாக உயிரை காப்பற்றக் கூடியது. அதனால் உயிர்களை காப்பாற்றிய புண்ணியம் கிட்டும்
  2. பதினாறு வகையான தானங்களில், அன்னதானம் முதன்மையானது.
  3. ஜென்மாந்திர வினை தீரும்
  4. முன்னோர் ஆசீர்வாதம் கிடைக்கும்
  5. சகல சம்பத்துகளையும் தரும்
  6. கடனை தீர்க்கவல்லது அன்னதானம் (ருணம்)
  7. அஷ்ட லக்‌ஷ்மி கடாக்‌ஷ்ம் கிடைக்கும்
  8. பசியாந்து வித்தல் என்பது உயிரை காத்த புண்ணியத்தை பெற்றுத்தரும்.(உண்டி குடுத்தார், உயிர் குடுத்தார் )

ஸ்ரீ லட்சுமி நாராயண பரபிரமனே நமக

தானத்தில் சிறந்தது அன்னதானம் .

ஸ்ரீ லட்சுமி நாராயணத் திருக்கோவிலில் அண்ணதானம் வழங்குவதால் அது ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமிகளின் பிரசாதமாகிறது, இந்த பிரசாதத்தை சாப்பிடுவதல் ஏற்படும் பலன்கள்

இது முழுக்க முழுக்க ஸ்ரீ லட்சுமி நாராயணணுடையது

  1. இந்த பிரசாதத்தைச் உண்பவர்களுக்கு தீராத பல நோய்கள் தீரும் . நோய்கள் வராமல் காக்கும் ஆரோக்கியம் மேம்படும், மனதில் உள்ள கல்மிஷம் நீங்கும்
  2. இந்த பிரசாதம் உண்பவர்களுக்கு சித்தம் , எண்ணங்கள் தெளிவாகும் பிரசாதம் உண்பவர் பவித்ரம் ஆவர்.
  3. இந்த பிரசாதத்தை உண்பவர்கள் உயர்ந்த பிறப்பு உண்டாகும் மோட்சம் கிடைக்க வழி வகுக்கும் இந்திரியங்களால் ஏற்படும், பாவங்களும் தோஷங்களும்  நீங்கும்.
  4. ஒவ்வொரு மனிதனுடைய கர்ம இந்திரியத்தையும் மனதையும் அடக்கி கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பகவானுடைய பிரசாதம் பேறுதவியாக இருக்கும்.
Scroll to Top